மேடையில் நடிகருக்கு முத்தம் கொடுத்த திருமணமான 'சுப்ரமணியபுரம்' நடிகை!
நடிகை ஸ்வாதி ரெட்டி தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜுக்கு மேடையில் முத்தம் கொடுத்துள்ளார்.
ஸ்வாதி ரெட்டி
இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'சுப்ரமணியபுரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை 'ஸ்வாதி ரெட்டி'. முதல் படத்திலேயே ரசிகர்கள் பலரையும் ஈர்த்தார்.
இதனை தொடர்ந்து போராளி, இதற்குத்தேனே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை, உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஸ்வாதி கடந்த 2018ம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார்.
ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கியிருக்கும் " மாந்த் ஆஃப் மது" என்ற படத்தில் நடித்துள்ளார் ஸ்வாதி. இந்த படத்தின் டிரைலரை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. டிரைலரை தெலுங்கு நடிகர் 'சாய் தரம் தேஜ்' வெளியிட்டார்.
நடிகருக்கு முத்தம்
இதனைத் தொடர்ந்து மேடையில் சாய் தரம் தேஜ் பேசுகையில் "கல்லூரி நாட்களில் இருந்தே ஸ்வாதி என் சிறந்த தோழி. இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட் ஸ்வாதி" என்று பேசினார்.
அப்போது மேடையில் நின்றுகொண்டிருந்த ஸ்வாதி உடனே சாய் தரம் தேஜை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இது அங்கிருந்தவர்களை சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஸ்வாதி "சாய் தரம் தேஜும், நானும் ஒன்றாக படித்தோம்.
நீங்கள் அனைவரும் அவரை விட நான் மூத்தவர் என நினைக்கலாம். அவர் முன்பே நான் சினிமாவில் அறிமுகமானேன். ஆனால் நாங்கள் இருவரும் ஒரே வயது. இருவரும் ஓகே காலேஜில் டிகிரி படித்தோம். என் வாழ்க்கையில் ஆதரவாக அவர் எப்போதும் இருக்கிறார்” என்று பேசினார்.