காதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா நடிகை ஸ்வாதி? வெளியான அதிர்ச்சி தகவல்!
நடிகை ஸ்வாதி தனது கணவரை விவாகரத்து செய்ததாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
நடிகை
தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்கள் நடித்து வந்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. இவர் தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்து வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இதன்பிறகு, போராளி படத்தில் மீண்டும் சசிக்குமாருடன் இணைந்து நடித்திருந்தார். பின்னர் விஜய்சேதுபதியுடன் இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
விவாகரத்து
இந்நிலையில், இவர் 2018- ல் கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்தார். தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் இருந்து இவரது கணவருடன் இருக்கும் புகைப்படம் மற்றும் திருமண புகைப்படம் அனைத்தையும் நீக்கிவிட்டார்.
அதனால் இவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி வருகின்றனர். இதேபோல் 2020-ல் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை நீக்கியதால் விவாகரத்து தகவல் பரவியது. ஆனால் அது போலி ஐடி என்று கூறி அதனை மறுத்தனர், தற்பொழுது இவர் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.