ஜிபி முத்து படத்தில் கவர்ச்சி பேயாக சன்னி லியோன் - வைரலாகும் போஸ்டர்

vijaysethupathi venkatprabhu sunnyleone actresssunnyleone ohmyghost
By Petchi Avudaiappan Apr 06, 2022 06:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

கவர்ச்சி புயல் என்றால் அது சன்னி லியோன் தான் என பெயர் எடுத்த காலம் போய் அவருக்குள் இருக்கும் நல்ல குணத்துக்காகவே அவருக்கு ரசிகர்கள் ஆனவர்கள் ஏராளம். பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதனிடையே டேனியல் வெபர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சன்னி , ஒரு பெண் குழந்தையும் தத்தெடுத்து வளர்த்து வந்தார். இதனைத் தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்று தற்போது வளர்த்து வருகிறார். 

இதற்கிடையில் யுவன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா நடிப்பில் உருவாகும் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, தங்கதுரை, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏற்கனவே ஓ மை கோஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த படம் என இயக்குநர் யுவன் தெரிவித்துள்ளார்.