16 வயசு தான் - அப்பவே நகுல் அதுக்காக டார்ச்சர் செஞ்சார் - போட்டுடைத்த சுனைனா!!

Nakul Sunaina
By Karthick May 12, 2024 11:15 AM GMT
Report

சுனைனா

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா. முதல் திரைப்படம் ஹிட்டடித்த நிலையில், தொடர்ந்து வரிசையாக வெற்றி படங்களில் நடித்தார் சுனைனா.

actress sunaina shares experience about nakul

நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் தமிழில் நடித்துள்ள சுனைனா, தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

மூக்கில் ஆக்சிஜன் குழாயுடன் மருத்துவமனையில் நடிகை சுனைனா - ரசிகர்கள் அதிர்ச்சி!

மூக்கில் ஆக்சிஜன் குழாயுடன் மருத்துவமனையில் நடிகை சுனைனா - ரசிகர்கள் அதிர்ச்சி!

நாயகியாக நடித்து வந்த போதே, நடிகர் விஜய்யின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் ஆனால் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட காட்சியின் நடித்திருந்தார். அண்மையில் நடிப்பில் "ரெஜினா" என்ற படத்திலும், இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

actress sunaina shares experience about nakul

2008-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான சுனைனா, தற்போது வரை பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில், தான் சுனைனா நகுலுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

16 வயதில்....

அவர் இது குறித்து அளித்த பேட்டியில் பேசும் போது, காதலில் விழுந்தேன் படத்தில் நடித்த போது வயது வெறும் 16 தான் இருக்கும் என குறிப்பிட்டு, அப்போதெல்லாம் எனக்கு தமிழ் தெரியாது. மிகவும் அமைதியாகவே இருப்பேன் என்றார்.

actress sunaina shares experience about nakul

அப்போது நடிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நகுல் தன்னிடம் வந்து பேசிக்கொண்டே இருப்பார் என்ற சுனைனா, தான் மௌனம் கலைத்து இயல்பாக பேசவேண்டும் என்பதே அவரின் எண்ணம் என சுட்டிக்காட்டி ஆனால் நகுல் Irritate செய்தார் என்று சொல்லமுடியாது என்று தெரிவித்தார்.