கணவருடன் விவாகரத்து; அரசியல்வாதியுடன் தொடர்பு - முதல்முறை வாய் திறந்த சுகன்யா!
வதந்திகளுக்கு நடிகை சுகன்யா பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை சுகன்யா
1990 களில் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லு புது நாத்து படத்தில் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
வதந்திக்கு பதிலடி
இதற்கிடையில் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டுக் கூட நீடிக்காமல் விவாகரத்து செய்தனர். அதில், மனவேதனை அடைந்த சுகன்யா தனிமையில் வசித்து வந்த அவர் சின்னத்திரையிலும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளிலும் வலம் வந்த வண்ணம் இருந்தார்.
கடைசியாக அவரது நடிப்பில் தீ இவன் என்ற படம் வெளியானது. இதற்கிடையில், சுகன்யா விவாகரத்துக்கு பின் ஒரு அரசியல்வாதியின் கட்டுப்பாட்டில் இருந்ததாக செய்திகள் பரவியது. இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது என் அக்காவின் மகள் என் மகள் இல்லை.
ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து ஒரு வருடத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் அப்ளை செய்தேன். ஆனால் சில ஆண்டுகளுக்கு பின் தான் விவாகரத்து கிடைத்தது. வேண்டும் என்றே செய்திகளை பரப்ப வேண்டும் என்ற காரணத்தால் இப்படி சிலர் செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.