42 வயதில் பிரபல காமெடி நடிகை திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல மலையாள நடிகை சுபி சுரேஸ் காலமானார்.
சுபி சுரேஸ் மறைவு
நடிகை சுபி சுரேஷ், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பிரபலம் ஆனவர். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். இதையடுத்து படிப்படியாக முன்னேறி தற்போது மலையாள திரையுலகில் காமெடி நடிகையாக வலம் வந்தார்.
இந்நிலையில், இவர் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
