ஸ்டாலின் பொண்டாட்டியா நீங்கனு கேக்குறாங்க. மிரட்டுறாங்க - நடிகை வேதனை!
நெகட்டிவ் ரோலில் நடிக்கும் தன்னை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பது குறித்து நடிகை சுபத்ரா பேசியுள்ளார்.
நடிகை சுபத்ரா
வீஜேவாக அறிமுகமாகி, சீரியலில் நுழைந்தவர் நடிகை சுபத்ரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர், தற்போது 'மீனாட்சி பொண்ணுங்க' என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சுபத்ரா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், நெகட்டிவ் ரோலில் நடிக்கும் தன்னை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "நான் 7 என்ற ஒரு சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தேன்.
திட்டினார்கள்
அப்போது நான் ஒரு காய்கறி கடைக்கு சென்றிருந்தேன். அங்கு என்னை பார்த்தவர்கள் "நீதானே ஸ்டாலின் பொண்டாட்டி. உனக்கெல்லாம் வாழக்கைய வாழவே தெரியாதா.
பார்த்து அனுசரிச்சு போகத் தெரியாதா. ஒழுங்கா வாழுற வழிய பாரு " என்று மிரட்டி விட்டு போனார்கள். அப்போதுதான் நான் யோசித்தேன் "என்னடா.. ஒரு சீரியலுக்கு இவ்வளவு அடிக்ட்டாவா இருப்பிங்கா" என நினைத்தேன்" என்று சுபத்ரா பேசியுள்ளார்.