ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க ..வேதனையுடன் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை... என்ன காரணம்?

CineUlagam Tamil Cinema
By Petchi Avudaiappan May 02, 2022 07:16 PM GMT
Report

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

7 சி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த ஸ்ரீநிதி சுதர்சன், வள்ளி, ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, யாரடி நீ மோகினி, ராஜா ராணி 2 ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே சமீபத்தில் வலிமை படத்தைப் பார்த்து விட்டு அவர் சொன்ன கருத்து அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. 

அஜித் ரசிகர்கள் பலர் ஸ்ரீநிதியின் கருத்துக்கு எதிர்மறையான கருத்தை பதிவு செய்த நிலையில் ஒருவர், பேச்சுலர் திரைப்படத்தில் நடித்திருந்த திவ்யபாரதியின் கதாபாத்திரத்தை போலவே இவரையும் பாலியல் வன்கொடுமை செய்து ஆதரவில்லாமல் விட வேண்டும் என்று மிகவும் கீழ்த்தரமாக கமெண்ட் செய்திருந்ததாக ஸ்ரீநிதி வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி  வெளியிட்டுள்ள அவர், தன்னுடைய செயல்கள் சிலருக்கு எரிச்சலை கொடுப்பதாகவும், அவர்கள் எல்லாம் என்னை பின்தொடர வேண்டாம் எனவும், நீங்கள் எனக்கு செய்ததை நான் திரும்ப செய்ய விரும்பவில்லை எனவும் விரக்தியுடன் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.