ஸ்ரீதேவி விஜயகுமாரின் வைரல் க்ளிக்ஸ் - வாயை பிளக்கும் ரசிகர்கள்!
ஸ்ரீதேவி விஜயகுமாரின் சென்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 
ஸ்ரீதேவி விஜயகுமார்
நடிகை ஸ்ரீ தேவி விஜயகுமார் தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் பிரபல நடிகை மஞ்சுளா தம்பதியின் இளைய மகள் ஆவார். இவர் தமிழில் ‘ரிக்ஷா மாமா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கினார்.

கதிர் இயக்கிய காதல் படம் ‘காதல் வைரஸ்’ மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் விக்ரமனின் ஏவிஎம்மின் ''பிரியமான தோழி''யில் நடித்ததற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.

திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில், ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கருப்பு உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியுள்ளது.    
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    