ஒயின்ஷாப்பில் பிரபல சீரியல் நடிகை... பாட்டில், பாட்டிலாக மது வாங்கிய வீடியோ வைரல்

By Petchi Avudaiappan Apr 27, 2022 10:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல சீரியல் நடிகை ஒயின்ஷாப்பில் மது வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

7 சி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த ஸ்ரீநிதி சுதர்சன்,  வள்ளி, ரோமாபுரி பாண்டியன்,  பகல் நிலவு, யாரடி நீ மோகினி, ராஜா ராணி 2 ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். 

இதனிடையே சமீபத்தில் வலிமை படத்தைப் பார்த்து விட்டு அவர் சொன்ன கருத்து அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் அவர் தன் நண்பர்களுக்காக மது வாங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தேன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை பின்தொடர்பவர்கள் கிடைத்தது நான் மீடியாவில் இருப்பதால் அல்ல..  நான் உண்மையாக இருந்ததால்... எனவே மக்கள் தீர்ப்பளிக்கட்டும், ஏனென்றால் அவர்களால் மட்டுமே தீர்ப்பளிக்க முடியும். எனக்கு எப்போதும் அன்பை மட்டுமே அளித்த மேடையில் நான் மீண்டும் நிஜமாக மாறத் தொடங்குகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.