நடிகை சவுந்தர்யாவிற்கு நிகழ்ந்தது விபத்து கிடையாது.. அது கொலை - புகாரால் பரபரப்பு!
நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சவுந்தர்யா
80, 90 களின் காலக்கட்டத்தில் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சவுந்தர்யா.
இவர் கடந்த ஏப்ரல் 17, 2004 ஆம் ஆண்டு பாஜக, தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கரீம்நகருக்கு விமானம் மூலம் வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவருடைய உடல் கிடைக்கவில்லை. நடிப்பு திறன் உள்ள நடிகை இறந்த சம்பவத்தால் அவரது ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் அவர் இறப்பு விபத்தல்ல, கொலை என ஆந்திராவை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மரணம்
அதில் ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிட்டிமல்லு. இவர் தனது புகாரில், "நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.