நடிகை சினேகா விவாகரத்து? முற்றுப்புள்ளி வைத்த அதிர்ச்சி புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்

Prasanna Sneha Tamil Cinema Marriage
By Thahir Nov 15, 2022 09:07 AM GMT
Report

நடிகை சினேகா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அறிமுகம் - திருமணம் 

கடந்த 2001 ஆம் ஆண்டு அச்சமுண்டு என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சினேகா. பின்னர் இவர் முன்னணி நடிகர்களான கமல், விஷால், தனுஷ், உள்ளிட்டோரும் நடித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் சினேகா பிரசன்னாவுடன் இணைந்து நடித்த பிறகு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

நடிகை சினேகா விவாகரத்து? முற்றுப்புள்ளி வைத்த அதிர்ச்சி புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள் | Actress Sneha Divorce Viral Photo

பின்னர் 2012 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் மற்றும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.

விவாகரத்து வதந்தி 

இதனிடையே கடந்த சில நாட்களாகவே சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியானது.

நடிகை சினேகா விவாகரத்து? முற்றுப்புள்ளி வைத்த அதிர்ச்சி புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள் | Actress Sneha Divorce Viral Photo

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகா தனது கணவர் பிரசன்னாவுக்கு முத்தம் கொடுப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.

நாங்கள் எப்போதுமே பிரியாத இரட்டையர்கள். ஹாப்பி விகெண்டு என்றும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு கேப்சன் போட்டுள்ளார்.

இதன் மூலம் விவாகரத்து செய்தி என்பது உண்மைக்கு புறம்பானது என்றும் இது முற்றிலும் வதந்தி என்றும் தெரியவந்துள்ளது. இதனால் இவர்களது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.