200 ரசிகர்கள் போட்டோ எடுக்க நிக்கிறாங்க; அப்போ அஜித் பண்ணது.. - போட்டுடைத்த சினேகா!
நடிகர் அஜித் அனைவரிடமும் எப்படி நடந்துகொள்வார் என்பது குறித்து நடிகை சினேகா பேசியுள்ளார்.
நடிகை சினேகா
'என்னவளே' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சினேகா. தொடர்ந்து ஆனந்தம், பம்மல் கே. சம்பந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஜனா, ஆயுதம், புதுப்பேட்டை, பாண்டி, உன் சமையல் அறையில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், விஜய், அஜித், கமல், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத 'தளபதி 68' படத்தில் சினேகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் அஜித் குறித்து பேசினார்.
அற்புதமான மனிதர்
அவர் பேசியதாவது "அஜித் ஒரு அற்புதமான மனிதர். தான் இவ்வளவு பெரிய ஹீரோ என்று அவர் நினைத்ததே இல்லை. நான் ஒருநாள் ஷூட்டிங் முடித்து புறப்படும்போது, ஒரு 100,200 பேர் வரிசையில் நின்றிருந்தனர்.
அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக நின்றுகொண்டிருந்தார்கள். ஷூட்டிங் முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அஜித் ஒவ்வொரு ரசிகருடனும் தனித்தனியாக நின்று புகைப்படம் எடுத்துவிட்டுதான் சென்றார்.
அவருடைய ரசிகர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார். ராசிக்கர்களை விடுங்க எல்லோரையும் சரிசமமாக நடத்துவார். ஆர்ட்டிஸ்ட், இயக்குநர், சிறியவர்கள், பெரியவர்கள் என்று அவரிடம் ஏதும் கிடையாது. எல்லோருக்கும் ஒரேமாதிரிதான் மரியாதை கொடுப்பார்" என்று சினேகா பேசியுள்ளார்.

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
