மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எனக்கு யாருமே உதவி செய்யல..உயிரிழப்புக்கு முன் நடிகை சிந்து கண்ணீர்..!
உதவின்னு கேட்டு வந்த அனைவருக்கும் ஓடி ஓடி உதவி செய்தேன், எனக்கு யாருமே உதவி செய்யலையே உயிரிழப்புக்கு முன் பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
புற்றுநோயால் அவதி
வந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சிந்து. இவருக்கு ஒரு மகள் மற்றும் பேத்தி உள்ளனர். இவரின் மாப்பிள்ளை நெஞ்சுவலியால் 32 வயதில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சிந்து, பலரும் தன்னிடம் உதவி என்று கேட்டு வந்தால் ஓடி ஓடி உதவிகள் செய்வேன்.
பின்னர் நான் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பின் எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை. என்னை வந்து யாரும் நலம் கூட விசாரிக்க வில்லை என்றார்.
இவருக்கு ஏற்பட்ட மார்பக புற்று நோயால் ஒரு மார்பகத்தை நீக்கிய நிலையில், மற்றொரு மார்பகத்தில் கேன்சர் பரவியதால் கடும் பாதிப்புக்கு உள்ளானார்.
கண்ணீர் மல்க உதவி கேட்ட நடிகை
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மார்பகங்களும் அகற்றப்பட்டதால் கடும் அவதியடைந்தார். பல யூடியூப் சேனல்களில் அனைவரிடத்திலும் உதவி கோரி பேட்டியளித்தார். தினசரி லட்சக்கணக்கில் செலவழிவதாகவும், உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தார்.
தான் உயிரிழந்தால் தன் மகள் மற்றும் பேத்தியை பார்த்து கொள்ள யாரும் இல்லை எனவும் பலமுறை கண்ணீர் வடித்துள்ளார்.
பலருக்கும் இரவு பகல் பார்க்காமல் ஓடி ஓடி சென்று உதவி செய்த நடிகைக்கு உதவி கிடைக்காமல் போனது தான் வேதனையின் உச்சம்