46 வயதில் நிறைவேறும் ஆசை - பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சிம்ரன்

Karthi Simran Tamil Cinema
By Thahir 1 மாதம் முன்
240 Shares

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை சிம்ரன்.

அறிமுகம் 

ரிஷிபாமா என்ற இயற்பெயர் கொண்ட இவர், மும்பையை பூர்விகமாக கொண்டவர். துார்தர்ஷனில் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.

1995 ஆம் ஆண்டு சனம் ஹர்ஜாய் என்ற என்ற திரைப்படத்தில் நடித்தார்.பின்னர் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் என்ற தமிழ் திரைப்படத்தில் முதன் முதலில் எண்ட்ரி கொடுத்தார்.

46 வயதில் நிறைவேறும் ஆசை - பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சிம்ரன் | Actress Simran Paired With Famous Actor

இதை தொடர்ந்து பூச்சூடவா, நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள் , அவள் வருவாளா, வாலி, ஜோடி உள்ளிட்ட திரைப்படத்திலும் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

46 வயதில் நிறைவேறும் ஆசை 

இந்த நிலையில் நவரச நாயகன் கார்த்திக் உடன் நடிகை சிம்ரன் இணைய உள்ளார். 20 வயதில் அவர் கூட நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவருக்கு அந்த ஆசை நிறைவேறாத நிலையில்,

46 வயதில் நிறைவேறும் ஆசை - பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சிம்ரன் | Actress Simran Paired With Famous Actor

தற்போது 46 வயதில் சிம்ரன், நடிகர் கார்த்திக்குடன் ஜோடியாக சேர உள்ளார். பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் இணைய உள்ளது இந்த ஜோடி