“உன் ஒரு சிறு பகுதி என்னுள் வாழ்கிறது...’ - தங்கை மோனலை குறித்து சிம்ரன் உருக்கமான பதிவு - ரசிகர்கள் சோகம்

viral-photo தற்கொலை actress-simran monal-rough-post சிம்ரன் உருக்கமானபதிவு மோனல்
By Nandhini Apr 14, 2022 08:58 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரின் இடுப்பழகில் பயங்காதவர்கள் யாரும் கிடையாது. தன்னுடைய நடனமாத்தாலும், அழகாலும் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.

தமிழ் திரையுலகில் விஜய், அஜித், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை சிம்ரன், தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

நடிகை சிம்ரன் கடந்த 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த நிலையில், சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தற்போது ‘அந்தகன்’, ‘சியான் 60’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிம்ரன்.

‘பார்வை ஒன்றே போதுமே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மோனல். இவர் சிம்ரனின் தங்கையாவார்.

நடிகர் விஜய்யுடன் ‘பத்ரி’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.

ஓரிரு படங்களில் நடித்து வந்த நடிகை மோனல் திடீரென கடந்த 2002ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது ஒட்டுமொத்த சினிமாத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்கை மோனலுடன் இருக்கும் சிறு வயது போட்டோவை பகிர்ந்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நீங்கள் இல்லாமல் இருக்கலாம், 20 வருடங்கள் கடந்தாலும், உங்களில் ஒரு சிறு பகுதி எப்போதும் என்னுள் வாழ்கிறது. நாங்கள் அனைவரும் உன்னை இழக்கிறோம் மோனு... எப்போதும்...’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.