முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி
நடிகை சிம்ரன் தனது மகன் மற்றும் கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முதல்வர் விஜய்
கோவிவுட்டில் உச்சத்தில் இருந்த தளபதி விஜய் தற்போது தமிழக முதல்வராகியுள்ள நிலையில், திரையுலகினர் அடுத்தடுத்து வருகை தந்தை அவருக்கு வாழ்த்து தெரிவித்து செல்கின்றனர்.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளை வென்ற நிலையில், சில கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தற்போது முதல்வர் பதவிக்கு விஜய் சென்றுள்ளார்.
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய், தனது கோடிக்கணக்கான சம்பளத்தை விட்டுவிட்டு தற்போது லட்சங்களில் சம்பளம் வாங்கும் பதவியில் இருக்கின்றார்.
இந்நிலையில் முதல்வர் விஜய்யை அடுத்தடுத்து பல பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்
இந்நிலையில் விஜய்யின் ராசியான நடிகையான சிம்ரன் தனது குடும்பத்துடன் முதல்வரை சந்திததுள்ளார். இவர் தனது இரண்டு மகன்கள், கணவருடன் சென்று வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இதுகுறித்து சிம்ரன் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பின்பு மதிப்பிற்குரிய முதல்வர் திரு விஜய் அவர்களை தனது குடும்பத்துடன் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும், அன்று இருந்தது போன்றே இன்றும் இருக்கின்றார்... அவருக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

சிம்ரன் பதிவிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் எங்களுக்கு பிடித்த ஜோடி என்றும், இருவருக்கும் வயதே ஆகாதா? இளமையாகவே இருக்கிறீர்களே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் சிம்ரன் மட்டுமின்றி நடிகர் ஷியாம், சிம்பு இவர்களும் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் பாரிய பி52 குண்டுவீச்சு விமானம் விழுந்து விபத்து : உயிரிழப்பு தொடர்பில் வெளியான தகவல் IBC Tamil