சிறுவயதில் உறவினரால் பாலியல் தொல்லை; குழந்தை பிறந்ததும்.. - நடிகை வேதனை!

Jiyath
in பிரபலங்கள்Report this article
சிறுவயதில் உறவினரால் ஏற்பட்ட மோசமான நிகழ்வு குறித்து சுருதி ரஜனிகாந்த் நடிகை பேசியுள்ளார்.
சுருதி ரஜனிகாந்த்
'சக்கப்பழம்' என்ற மலையாள தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை சுருதி ரஜனிகாந்த். இவர் குஞ்சல்தோ, பத்மா, நீரஜா, குயீன் எலிசபெத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை என படிப்படியாக முன்னேறிய இவர்,
தற்போது சிறுவயதில் உறவினரால் ஏற்பட்ட மோசமான நிகழ்வு குறித்து பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய சுருதி ரஜனிகாந்த் "குழந்தை பருவத்தில் நான் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன். அது எனது வாழ்க்கையில் இருள் நிறைந்த கால கட்டம்.
வேதனை
எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் எனது உறவினர் என்பதால் வீட்டில் தெரிவிக்கவில்லை. குழந்தைகள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும்போது தைரியமாக தைரியமாக எதிர்க்க வேண்டும்.
எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த உறவினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் என்னிடம் மன்னிப்பு கேட்டு குறுந்தகவல் அனுப்பினார். இப்போது நினைத்தாலும் சொந்தங்கள் மத்தியில் அவரது முகத்திரையை என்னால் கிழிக்க முடியும். அந்த பயம் அவருக்கும் இருக்கிறது'' என்று வேதனை தெரிவித்துள்ளார்.