நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவ தொடங்கி நாட்டை கடுமையாக பாதித்தது.
தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் மூன்றாம் அலையின்போது பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் தொற்றிலிருந்து மீண்டும் வந்துள்ளனர்.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.
— shruti haasan (@shrutihaasan) February 27, 2022
இந்த செய்தியை தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர்.
இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக லாபம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.