பீரியட்ஸ் வலியால் துடித்தேன்; அப்போ சித்து தான் அதை.. - நடிகை ஸ்ரேயா வெளிப்படை!
தங்களது திருமண வாழ்க்கை குறித்து நடிகை ஸ்ரேயா பேசியுள்ளனர்.
சித்து - ஸ்ரேயா
திருமணம் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன். இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து ராஜா ராணி சீசன் 2 சீரியலில் கதாநாயகனாக சித்து நடித்தார். ரஜினி என்ற சீரியலில் ஸ்ரேயா அஞ்சன் நடித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளனர். அதில் ஸ்ரேயா கூறியதாவது "ஒருநாள் நடந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது.
உதவி செய்தார்
நாங்கள் ஒரு ஷூட்டிங்காக கொடைக்கானலுக்கு சென்றிருந்தோம். அங்கு எதிர்பார்க்காத விதமாக எனக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. அப்போது நான் பேட் எதுவும் எடுத்துக்கொண்டு போக மறந்து விட்டேன். நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால் கூட ஒரு மணி நேரம் டிராவல் செய்ய வேண்டும்.
அதனால் நான் என்ன செய்வது என்று தத்தளித்து தவித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சித்து தான் சில உதவிகளை செய்தார். அதற்கு பிறகு தான் எனக்கு அவர் மீது பெரிய நம்பிக்கை வந்தது, அவரை பிடிக்கவும் தொடங்கியது" என்று தெரிவித்துள்ளார்.