சாப்பாட்ட ஒளிச்சு வைப்பாங்க.. நீயெல்லாம் ஹீரோயினா'னு கேட்டு.. நடிகை ஷோபனா வேதனை!

Shobana Tamil TV Serials Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Mar 21, 2024 04:00 PM GMT
Report

தனது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்கள் குறித்து நடிகை ஷோபனா பேசியுள்ளார்.

நடிகை ஷோபனா 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'முத்தழகு' என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் ஷோபனா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

சாப்பாட்ட ஒளிச்சு வைப்பாங்க.. நீயெல்லாம் ஹீரோயினா

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷோபனா, தனது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "என் தாத்தா வீட்டில் தான் நான் தங்கி படித்தேன். அப்பா, அம்மா துணை இல்லாமல் தாத்தா என்னை வளர்த்தார். கல்லூரி படிக்கும்போது, யாரும் சமைத்துக் கொடுக்க இருக்க மாட்டார்கள். 

வேதனை 

அப்போது நான் எனது நண்பர்கள் சாப்பிடும் தட்டிலிருந்து எடுப்பேன். அவர்கள் "ஷோபனா வரா.. சாப்பிட்ட ஒளிச்சு வைங்க" என்று கூறுவார்கள். இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் ஒரு நாளைக்கு ஒரு வேலை தான் சாப்பிட்டேன்.

சாப்பாட்ட ஒளிச்சு வைப்பாங்க.. நீயெல்லாம் ஹீரோயினா

பின்னர் நான் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு இயக்குநர் என்னிடம் "நீயெல்லாம் ஹீரோயினுக்கு செட் ஆகமாட்ட, நீ அந்த மெட்டீரியல் கிடையாது" என்று சொன்னார்.

அப்போது தான் விழவே கூடாது, போராடவேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவு கஷ்டப்பட்டு தான் தற்போது இந்த நிலைமையில் இருக்கிறேன்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.