ஆபாசப்பட மன்னனா? அந்த தேவைக்கு தான் கல்யாணம் பண்ணேன் - ஷில்பா ஷெட்டி பளீச்!
தனது கணவர் குறித்து பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பேசியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பாஸிகர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், குஷி படத்தில் மேக்கரினா மேக்கரினா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இ

வர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜ் குந்த்ரா மீது கடந்த 2021-ம் ஆண்டு ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், நடிகைகளிடம் பண ஆசை காட்டி, வீடியோவில் நடிக்க வைத்து வெளிநாட்டு மொபைல் ஆப்களில் அவர் வெளியிட்டதாகக் கூறப்பட்டது.
பணக்காரி தான்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா, 2 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி அளித்த பேட்டி ஒன்றில் "என் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் பட மன்னன் என்றும், நான் பணத்திற்காக அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் விமர்சிக்கின்றனர்.

நான் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பணக்காரியாகத்தான் இருந்தேன், இப்போதும் பணக்காரியாகத்தான் இருக்கிறேன். ஒரு வெற்றிகரமான பெண்ணாக இருக்கும்போது, என்னை பாதுகாக்க ஒரு ஆண் இருக்க வேண்டும் என்பதால் அவரை திருமணம் செய்து கொண்டேன்.
அவர் நல்ல மனிதராக இல்லாவிட்டால் நான் அவரை திருமணம் செய்து இருக்கமாட்டேன். ராஜ் குந்த்ராவை விட வசதி படைத்தவர்கள் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil