என் தேவதை: மகளின் படத்தை முதன்முறையாக வெளியிட்ட நடிகை ஸ்ரேயா சரண்

1 week ago

பிரபல நடிகையான ஸ்ரேயா சரண், தனக்கு மகள் பிறந்திருப்பதை வீடியோ மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான Andrei Koscheev என்பவரைக் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பின்பு முக்கியமான கதாபத்திரங்களை தெரிவு செய்து நடித்து வரும் இவர் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகளை பதிவிட்டு வருகின்றார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா, முதல் முறையாக தனக்கு குழந்தை பிறந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட பதிவில், வணக்கம் மக்களே... கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தனிமை படுத்துதல் நேரத்தில், எங்கள் வாழ்க்கையை மாற்றும் தேவதையை நான் பெற்றெடுத்துள்ளேன்.

இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதாகவும் கூறியுள்ளார்.

குறித்த காட்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்படுவதுடன் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்