பக்கத்துல வந்து அந்த இடத்தில கை வச்சான்.. நடிகையிடம் அத்துமீறிய நபர் - அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நடந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் காக்க முட்டை என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து, தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
அதன்பிறகு இவர் வடசென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார், அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்பொழுது இவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார்.
பேட்டியில் நடிகை
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் தன்னிடம் அத்துமீறிய நபர் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "நான் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய தோழி வீட்டுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் அருகில் நெருங்கி வந்தார்.
ஒருகட்டத்தில் என் மீது அங்கு கை வைத்துவிட்டார். உடனே அதிர்ச்சியான நான் ஆட்டோவை நிறுத்த சொல்லிவிட்டு அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் என்ன அண்ணா இதுபோன்ற ஆட்களை எல்லாம் ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என கேட்டேன்.உடனே கோபமாக அந்த ஓட்டுநர் என் மீது கை வைத்த நபரை கடுமையாக திட்டிவிட்டு ஆட்டோவிலிருந்து இறக்கிவிட்டுவிட்டார்" என்று கூறியுள்ளார்.