கோடியில் புரண்டு குழந்தைகளுடன் தெருக்கோடிக்கு வந்த நடிகை..!
சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் தனது ரூ.100 கோடி மதிப்பு வீட்டை விற்று விட்டு தனது குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்.
சீரியலின் வில்லி நடிகை
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பார்வதி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் சாந்தி வில்லியம்ஸ்.
இவர் 12 வயது முதல் நடிக்க தொடங்கிய இவர் 1999 ஆம் ஆண்டு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, பூவே உனக்காக, உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
1979 ஆம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை திருமணம் செய்த இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்
சாந்தி வில்லியம்ஸ் பேட்டி ஒன்றில் எனது கணவருக்கு கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும், குழந்தைகளாகவே பார்ப்பார்.
ஏகப்பட்ட கார்கள் இருந்தது, இவர் எங்கு போக வேண்டும் என சொல்கிறாரோ அந்த திசையில் இருக்கும் காரை எடுத்து டிரைவர் காத்திருப்பார்.
1996க்கு முன்பு படங்களை எடுத்து நஷ்டமாகிவிட்டது.
இதனால் கே.கே.நகரில் 100 கோடி ரூபாய் மதிப்பு எனது சொந்த வீட்டை இழந்து குழந்தைகளுடன் நானும் அவரும் நடுரோட்டில் நிற்கிறோம்.
பழைய நிலைமைக்கு வருவதற்காக கஷ்டப்பட்டு உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.