அண்ணனை கொன்ற பிரபல நடிகை! வெளியான திடுக்கிட வைக்கும் உண்மைகள்

Shanaya Katwe
By Fathima Apr 24, 2021 09:58 AM GMT
Report

பிரபல திரைப்பட இந்தி நடிகையான ஷான்யா தன்னுடைய அண்ணனை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் தலை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், மிஸ் கர்நாடகா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், இந்தி நடிகையுமான ஷான்யாவின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் இது குறித்து ஷான்யாவிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் தான் கொலை செய்து, அவர் சடலத்தை தூக்கி வீசியுள்ளார் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.

அண்ணனை கொன்ற பிரபல நடிகை! வெளியான திடுக்கிட வைக்கும் உண்மைகள் | Actress Shanaya Katwe Arrested Brother Murder Case

மும்பையில் வசித்துவரும் ஷான்யா, தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை காதலித்து வந்துள்ளார். இது ஷான்யாவின் அண்ணன் ராகேஷ்க்கு பிடிக்கவில்லை.

இதனால் இது குறித்து அடிக்கடி இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடிவு செய்த நடிகை ஷான்யா, தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலமாக ராகேஷை கொலை செய்துள்ளனர்.

தற்போது இந்த கொலை தொடர்பாக நடிகை ஷான்யா மற்றும் அவரது காதலன் உட்பட 8 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.