யானையை கண்டு மிரண்டு ஓடிய நடிகை சாக்ஷி! ஹாட் போட்டோ ஷூட்! வைரலாகும் வீடியோ!
நடிகை சாக்ஷி அகர்வால் போட்டோ ஷூட்டின் போது யானையை பார்த்து பயந்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. படங்களில் பிஸியாக உள்ள சாக்ஷி அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
பின் தொடரும் ரசிகர்களுக்காக சேலை, மாடர்ன் டிரெஸ் என சாக்ஷி நடத்தும் போட்டோ ஷூட்டுக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.

இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அவ்வப்போது அரைகுறையாகவும், கிளாமராகவும் எடுத்து வெளியிடப்படும் புகைப்படங்கள் பலரின் முகங்களை சுழிக்க செய்கிறது.
அந்த வகையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் படுத்திருக்கும் யானை மீது சாய்ந்த வண்ணன் போட்டோ ஷூட் எடுக்கிறார் நடிகை சாக்ஷி.
அப்போது யானை லேசாக அசைந்து காதை ஆட்டியது. இதனை கண்டதும் பயந்து சில நொடிகள் யானையிடமிருந்து விலகினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.