ஆசை இருந்துச்சு.. வருஷத்துக்கு ஒருத்தன் : ஷகீலா ஓப்பன் டாக்
மலையாளம் , தமிழ் மொழி என இரு மொழிகளிலும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷகீலா ,பல கவர்ச்சி படங்களிலும் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஷகீலா
பொதுவாக ஷகீலா தனது நேர்காணலில் வெளிப்படையாக பேசக்கூடியவர்,கால போக்கில் அவருக்கு ரசியான வாய்ப்புகள் அமையாத காரணத்தால் சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி தொடரில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்த ஷகீலாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக உள்ள ஷகீலா தனது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரும் பிரபலங்களிடம் தனது வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக பேசியுள்ளார்.
கல்யாண ஆசை
இவ்வாறான நிலையில் இந்த நிலையில் அவரை பேட்டி அளித்த ஒரு தனியார் சேனல் ஷகீலாவின் திருமணத்தை பற்றி கேட்டது. ஏன் உங்களுக்கு திருமணமே ஆகலைனு வருத்தப்பட்ட்டுதுண்டா? அந்த ஆசை இல்லவே இல்லையா? என்று கேட்டனர். அதற்கு பதில் கூறிய ஷகீலா திருமண ஆசை இல்லாமல் எந்த பெண்ணும் இருக்க மாட்டார்கள், எனக்கும் இருந்துச்சு, 2 வருஷத்திற்கு ஒருத்தன், 4 வருஷத்திற்கு ஒருத்தன், ஒரு வருஷத்திற்கு ஒருத்தன் என்று இருந்தார்கள் என கூறினார்.
மேலும் அப்போ இத்தனை பேரை மாத்திருக்கீங்கனா உங்ககிட்ட தான் பிரச்சினை இருக்கா? என தொகுப்பாளினி கேட்டார்.அதற்கு ஷகீலா ,ஆமாம், நான் பண்ண ஒரே தப்பு, என்னை பற்றி யோசிக்கிறத விட்டு என் குடும்பத்தை பற்றி நிறைய யோசித்தேன், அதனால் தான் இவ்ளோ பிரச்சினையும் என்று கூறியிருந்தார்