ஒரு 5 நிமிஷம் வச்சிப்பேன்.. ரோட்ல பார்த்தாக்கூட தூக்கிப்பேன் - ஓப்பனாக சொன்ன ஷகிலா!

Tamil Cinema Shakeela Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Apr 01, 2024 03:51 PM GMT
Report

திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசைகள் குறித்து நடிகை ஷகிலா பேசியுள்ளார் 

நடிகை ஷகிலா 

மலையாள திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. 1990களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் ஹிட் அடித்தது. பின்னர் ஆபாசப் படங்களில் நடிப்பதை தவிர்ந்த ஷகிலா, திரைப்படங்களில் அவ்வப்போது நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஒரு 5 நிமிஷம் வச்சிப்பேன்.. ரோட்ல பார்த்தாக்கூட தூக்கிப்பேன் - ஓப்பனாக சொன்ன ஷகிலா! | Actress Shakeela About Marriage And Babies

இதையடுத்து கடந்தாண்டு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஷகிலா கலந்து கொண்டார்.

முட்டாள்கள் தினம்.. ரசிகர்களை கிண்டலடித்து சிரித்த நடிகர் அஜித் - வைரலாகும் Video!

முட்டாள்கள் தினம்.. ரசிகர்களை கிண்டலடித்து சிரித்த நடிகர் அஜித் - வைரலாகும் Video!

பேட்டி 

அப்போது அவரிடம் "நமக்கென்று ஒரு கணவன், குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கேமே என்று நினைத்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷகிலா "கண்டிப்பா தோனியிருக்கு. நானும் மனுஷி தானே. ஒரு கடைக்கு போனால், அங்க யாரோட குழந்தையா இருந்தாலும், யார் தூக்கி வச்சிருந்தாலும் போய் வாங்கிப்பேன்.

ஒரு 5 நிமிஷம் வச்சிப்பேன்.. ரோட்ல பார்த்தாக்கூட தூக்கிப்பேன் - ஓப்பனாக சொன்ன ஷகிலா! | Actress Shakeela About Marriage And Babies

நான் ஒரு 5 நிமிஷம் வச்சிப்பேன். அக்கா என்னோட பையன் என்று அவங்க சொன்னதும் கொடுத்துருவேன். ஆனால் அந்த குழந்தையை கொஞ்சிய பிறகுதான் கொடுப்பேன். இணைக்கும் குழந்தைகளை ரோட்ல பார்த்தாக்கூட தூக்கிப்பேன். எனக்கு குழந்தைகள் என்றாலே ரொம்ப பிடிக்கும்" என்று பேசியுள்ளார்.