ஆசை இருந்துச்சு.. வீட்ல ஒருத்தன், அங்க ஒருத்தன் - ஷகீலா ஓபன் டாக்!
நடிகை தனது காதலர்கள் குறித்து வெளிப்டையாக பேசியுள்ளார். n
ஷகீலா
மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷகீலா. இவர் கவர்ச்சி காட்டி பல பலான படங்களில் நடித்துள்ளார், 90ஸ் களில் பலருக்கு பிடித்தமான கவர்ச்சி நடிகை. ஷகிலாவுக்கு மலையாளத் திரையுலகம் தடை விதித்ததால் அவர் தமிழில் எண்டரி கொடுத்தார்.
பின்னர் கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் இவர் வெகு நாட்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் கலந்துகொண்டார்.
அதன்மூலம் மக்களுக்கு இவர் மீது இருந்த அபிப்ராயம் மாறியது. தற்பொழுது தெலுங்கும் பிக் பாஸில் கலந்துகொண்டு விளையாடினார், தற்பொழுது எவிக்ட் ஆகி வெளியேறினார்.
பேட்டி
இந்நிலையில், நடிகை ஷகீலா சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமண ஆசை குறித்து கேட்டபொழுது, "ஏன் நா பொம்பள இல்லயா, எனக்கும் ஆசை இருந்தது. ஆனால், யாரும் செட் ஆகவில்லை. நான் சின்ன வயசுல காதல் அப்படினா என்னன்னே தெரியாது அப்போது வீட்ல ஒருத்தன், ஸ்கூல்-ல ஒருத்தன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தேன். ஒவ்வொருத்தரையும் நான் துரத்திவிட்டுடுவேன்.
மூனு வருஷம் ஒருத்தன், நாலு வருஷம் ஒருத்தன், ஏழு வருஷம் ஒருத்தன், பத்து வருஷம் என ஒவ்வொருத்தர் கூடவும் இத்தனை வருஷம் வாழ்ந்து இருக்கிறேன்.
அனைவரும் போனதற்கு காரணம் நான் தான், குடும்பமா வாழ்க்கையானு கேள்வி வந்த போது, நான் என் குடும்பத்தை பார்த்துக்கொண்டு என் வாழ்க்கையை பார்க்காமல் விட்டு விட்டேன். இதனால் தான் இப்போது தனியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.