நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு - பின்னணி என்ன?
நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சீதா
நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீஸில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், தனது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லை. அதை யாரோ திருடி உள்ளார்கள்.
நகை திருட்டு
எனவே காணாமல் போன எனது இரண்டரை சவரன் ஜிமிக்கியை கண்டுபிடித்து தரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சீதா. பத்து ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர்.
தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகிய சீதா, சீரியல்களில் நடித்து ரீ-எண்ட்ரி கொடுத்தார். தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan