அத எதிர்பார்த்தேன்.. முழுசா கிடைக்கல; பார்த்திபனை பிரிய காரணம்..? - நடிகை சீதா வெளிப்படை!
பார்த்திபன்-சீதா
தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் பார்த்திபன். 'புதிய கீதை' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடந்து பொண்டாட்டி தேவை, புள்ளகுட்டிக்காரன், இவன், வித்தகன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
மேலும், புதிய பாதை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, சரிகமபதநி, பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என,ஆயிரத்தில் ஒருவன், ஒத்த செருப்பு, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவருக்கு நடிகை சீதாவுடன் 1990ம் ஆண்டு திருமணமானது.
என்ன எதிர்பார்ப்பு?
பின்னர் சில காரணங்களால் 2001ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் நடிகை சீதா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கணவரிடம் தன்னுடைய எதிர்பார்ப்புகள் என்ன? என்பதை குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது "உலகமே தெரியாத ரொம்ப சராசரியான ஒரு பொண்ணு நானு. இப்போ அவரும் பாத்தீங்கன்னா அந்த லெவல்தான். பணமோ, ஆஸ்தி அந்தஸ்து எதிர்பார்த்து போகக்கூடிய லெவல்ல அவரும் கிடையாது. நானும் கண்டிப்பா அதையெல்லாம் எதிர்பார்க்கல.
நான் எதிர்பார்த்தது, சுகாசினி ஒரு படத்துல 'என் புருஷன்தான்.. எனக்கு மட்டும்தான்" அப்படீன்னு பாடுவாங்க. அந்தமாதிரி டைப்லதான் எதிர்பார்த்தேன். கணவர்கிட்ட நமக்கு முழுசா அன்பு கிடைக்கணும்னு எதிர்பார்த்ததுதான். இதுகூட இல்லன்னா அப்பறம் என்ன இருக்கு வாழ்க்கையில" என்று பேசியுள்ளார்.

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
