காருக்குள் விடாமல்..கர்ப்பமாக இருந்தப்போது எட்டி உதைத்து கொடுமை -முன்னாள் கணவர் பற்றி சரிதா!
நடிகை சரிதா தன்னுடைய முன்னாள் கணவரும் மலையாள நடிகருமான முகேஷ் செய்த கொடுமைகளை கூறியுள்ளார்.
சரிதா
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் கொடுமைகளை ஹேமா கமிட்டி அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால் ஏராளமான மலையாள நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அந்த வகையில், நடிகைகளிடம் அத்துமீறியதாக குற்றம்சாட்டப்பட்ட மலையாள நடிகரும்,
கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான முகேஷ் பற்றியும் அவர் செய்த கொடுமைகள் பற்றியும் அவரின் முன்னாள் மனைவி சரிகா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.
சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் அப்படி எனக்கு நடக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை. முகேஷால் நான் அனுபவித்த கொடுமைகள் குறித்து இதுவரை சொன்னதில்லை. முதன்முறையாக சொல்கிறேன்.
நான் கர்ப்பமாக இருந்த சமயத்தில் ஓணம் பண்டிகை வந்தது. பண்டிகை என்றாலே எல்லோரும் சந்தோஷமாக தானே இருப்போம். ஆனால் அப்போ கூட முகேஷ் என்னுடன் சண்டை போட்டு என் வயிற்றிலேயே எட்டி உதைத்தார். அப்போது வலியால் நான் கீழே விழுந்து கதறி அழுதேன்.
நடிகைகளிடம் அத்துமீறல்; திரையுலகை கட்டுப்படுத்தும் 15 முக்கிய புள்ளிகள் - ஹேமா அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
கொடுமை
அதைப்பார்த்து நீதான் நல்ல நடிகையாச்சே நல்லா நடிக்கிறாய் என்று சொல்லி கொக்கரித்தார். நான் கர்ப்பமாக இருந்த 9வது மாதத்திலும் ஒரு சம்பவம் நடந்தது. நானும் அவரும் இரவு உணவுக்காக வெளியில் செல்ல திட்டமிட்டிருந்தோம். வீட்டிலிருந்து வெளியே வந்த என்னை அவர் காருக்குள் ஏறவிடவில்லை.
என்னை வெறுப்பேற்ற வேண்டும் என்று.. காரை முன்னும் பின்னும் நகர்த்தி அதில் ஏற விடாமல் செய்தார். ஒரு கட்டத்தில் என்னால் அழுகையை தாங்க முடியவில்லை. மறுசமயம் ஒருநாள் இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்தார். ஏன் லேட்டா வந்தீங்கனு கேட்டேன்.
அதற்கு என் தலைமுடியை பிடித்து தரையில் தள்ளிவிட்டு அடித்தார். அதன்பின்னர் அவர் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். இந்த கொடுமையெல்லாம் அவர் தந்தையின் கண் முன்னேயே நடத்தது. அவரது தந்தை என்னை தேடி ஒருநாள் என் வீட்டிற்கு வந்திருந்தார்.
முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி, என்னிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் இது தொடர்பாக வெளியில் தெரிய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு என்னிடம் சத்தியமும் வாங்கிவிட்டார். அவர் இப்போது உயிருடன் இல்லை. எனவே இந்த விஷயத்தை வெளிப்படையாக கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.