நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளா இது? திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் என்ன பரிசு கொடுத்தாரு தெரியுமா?

daughter actress saranya ponvannan marriage reception
By Anupriyamkumaresan Jul 06, 2021 07:10 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகை சரண்யா பொன்வண்ணனின் மூத்த மகளான ப்ரியதர்ஷனியின் திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் தன் குடும்பத்தினரோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளா இது? திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் என்ன பரிசு கொடுத்தாரு தெரியுமா? | Actress Saranya Ponvannan Daughter Marriage

நடிகர் பொன்வண்ணன், நடிகை சரண்யா தம்பதியின் மூத்த மகள் ப்ரியதர்ஷினிக்கும், விக்னேஷ் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணத்தை தொடர்ந்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையையும் பரிசாக அளித்து வாழ்த்தினார்.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளா இது? திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் என்ன பரிசு கொடுத்தாரு தெரியுமா? | Actress Saranya Ponvannan Daughter Marriage

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 27ம் தேதி மகாபலிபுரத்தில் நடந்த இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணமத்திலும் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதற்கிடையே ஆக்ஷன் கிங் அர்ஜுன், தான் கட்டி முடித்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருமாறு ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். ஸ்டாலின் சார்பில் அவரின் மனைவி துர்கா அந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வரிசையாக முதலமைச்சர் திரையுலகினரின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்று வருகிறார்.