வேலாயுதம் தங்கச்சி சரண்யா மோகனா இது? அடையாளம் தெரியாத அளவு மாறி போன விஜய் ரீல் தங்கை!

actress saranya mohan photo viral
By Anupriyamkumaresan Jul 05, 2021 11:21 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் நடித்து பின் கதாநாயகியாக மாறியவர் நடிகை சரண்யா மோகன். மலையாள நடிகையாக அறிமுகமாகி தனுஷ், நயன் தாராவின் யாரடி நீ மோகினி படத்தில் நயனுக்கு தங்கையாக நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

பல்வேறு படங்களில் ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ தங்கச்சியாக நடித்து, தங்கச்சி கேரக்டரை தக்க வைத்துள்ளார். ஜெயங்கொண்டான், மகேஷ் சரண்யா மற்றும் பலர் உள்ளிட்ட திரைப்படங்களில் தங்கச்சி கேரக்டரில் அசத்தியுள்ளார்.

வேலாயுதம் தங்கச்சி சரண்யா மோகனா இது? அடையாளம் தெரியாத அளவு மாறி போன விஜய் ரீல் தங்கை! | Actress Saranya Mohan Photo Viral

முக்கியமாக நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் அவருக்கு செல்ல தங்கையாக நடித்து தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பின் வெ படத்தின் மூலம் பிரபல நடிகையாக வளம் வந்தவர் சரண்யா மோகன். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். இதையடுத்து பஞ்சாமிருதம், அ ஆ இ ஈ, வெண்ணிலா கபடி குழு, ஈரம், ஆறுமுகம் உள்ளிட்ட படங்களில் நடிகையாகவே நடித்தார்.

இதனை தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் என்ற பல் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். 2016ல் ஆண் மகனை பெற்றெடுத்த நடிகை சரண்யா இரண்டாவதாக பெண் குழந்தைக்கு தாயானார். தற்போது தனது இரு குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சரண்யாவா இது என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.