விஜய் தங்கச்சியா நடிக்க மாட்டேன்..அவர் என்னை ப்ரொபோஸ் பண்ணாரு - நடிகை சரண்யா வெளிப்படை!
நடிகை சரண்யா மோகன் வேலாயுதம் படம் குறித்து பேசியுள்ளார்.
சரண்யா மோகன்
காதலுக்கு மரியாதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சரண்யா மோகன். பின்னர் தனுஷின் யாரடி நீ மோகினி என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். அதில் இவரின் குழந்தைத்தனமான நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது.

பின்னர் அழகர் சாமியின் குதிரை என்ற படத்தில் நடிகர் அப்புக்குட்டிக்கு ஜோடியாக நடித்திட்டார். அதனைத் தொடர்ந்து வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக சிறப்பாக நடித்திருந்தார். பின்னர் ஒஸ்தி, கோளாகலம் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது சரண்யா திருமணம் செய்து கொண்டு சினிமா துறையை விட்டு விலகி வாழ்ந்து வருகிறார். அண்மையில் இவர் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது வேலாயுதம் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
அவர் பேசுகையில் " விஜய்க்குதான் தங்கச்சி என்று தெரிந்த பிறகும் வேலாயுதம் பட இயக்குநரிடம் நான் முதலில் 'சாரி சார் தப்ப எடுத்துக்காதீங்க தங்கச்சி ரோலில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்.

ஆனால் கதை முழுவதுமாக கேட்டபிறகு, சரி இதை பண்ணலாம் என்று முடிவு செய்து பிறகுதான் வேலாயுதம் படத்தில் நடித்தேன். இப்போதும் என்னை மக்கள் பார்க்கும்போது என்னை விஜய் சார் தங்கச்சி என்று கூட சொல்ல மாட்டார்கள். வேலாயுதம் தங்கச்சி என்றுதான் சொல்வார்கள். கமெண்டுகள் கூட அப்படிதான் வரும் என்று சரண்யா பேசியுள்ளார்.

மேலும் அவரிடம் "சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்து யாராவது உங்களை ப்ரொபோஸ் (Propose) செய்திருக்கிறார்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சரண்யா மோகன் " சொல்லியிருக்கிறார்கள், ஆனால் யாரென்று கேட்காதீர்கள். நான் சொல்லமாட்டேன். ஏனா அவரும், அவரின் வாழ்க்கையை பார்க்க வேண்டும் தானே. அதில் கோவப்படும்போல் ஏதும் இல்லை.
அவர், அவரின் மைண்டில் உள்ள ஒரு விஷயத்தை என்னிடம் பகிர்ந்தார்கள். நான் அதற்கு சிரித்துக் கொண்டு தான் ரியாக்ட் செய்தேன். அவரும் அதை கேஷுவலாக எடுத்துக்கொண்டார்" என்று பேசியுள்ளார்.
You May Like This Video
இலங்கை வந்த வத்திக்கான் வெளியுறவு அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு : குழம்பியது பயணத்திட்டம் IBC Tamil