சமந்தா ஒரு .. ட்விட்டர்வாசியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சமந்தா
நடிகை சமந்தாவை தரக் குறைவாக பேசிய ட்விட்டர்வாசிக்கு சமந்தா ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா ‘தி ரைஸ்’ . இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அல்லு அர்ஜூனின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக படத்தின் ‘oo antava mama ' பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆண்களை வக்கிரம் உள்ளவர்களாக சித்தரிக்கும் பாடலை நீக்காவிட்டால் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு தொடர்வோம் என்றது ஆந்திர ஆண்கள் அமைப்பு.
இந்நிலையில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பாடலின் வரிகள் உண்மைதானே..உண்மையைத்தான் எழுதியிருக்கிறார்கள் என்றார் சிரித்தப்படி. என்னதான் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், இன்று சமந்தாவின் நடனம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தற்கு ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்த ட்விட்டர்வாசி ஒருவர், “சமந்தாவை தரகுறைவாஅகவும் அவர் ஒரு ஜென்டில்மேனிடம் இருந்து 50 கோடி பணத்தை கொள்ளையடித்துள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.
Kamarali Dukandar God bless your soul . https://t.co/IqA1feO9K1
— Samantha (@Samanthaprabhu2) December 21, 2021
இதில் சமந்தாவையும் டேக் செய்திருந்தார்.
இதற்கு தனது ட்விட்டரில் பதிலளித்த நடிகை சமந்தா “கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசீர்வதிப்பாராக” எனத் தெரிவித்துள்ளார்