சமந்தா எங்கே இருக்கிறார் தெரியுமா? - போட்டோ பார்த்து பதறிப்போன ரசிகர்கள்
நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ..சொல்றீயா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மேலும் சமந்தா நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு சமந்தா சுற்றுலா செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் தற்போது ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள சமந்தா அங்கிருந்தபடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் விவாகரத்து பெற்று வாழ்க்கையை சோகமாக கழிப்பவர்கள் மத்தியில் சமந்தா என்ஜாய் செய்வதாக தெரிவித்துள்ளனர்.