குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் நடிகை சமந்தா! உருக்கமான பதிவு
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினதினத்தில், ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பாரம்பரிய ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ரூத் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இது குறித்து சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் சமந்தாவும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிகழ்ச்சி அரசியல், இராஜதந்திரம், கலை, கலாச்சாரம் ஆகிய துறைகளின் சிறந்தவர்களை ஒருங்கிணைக்கும் பாரம்பரிய நிகழ்வாகும்.
சினிமா துறையில் மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும், சமூக ஆர்வலராகவும் தனது பங்களிப்புகளால் சமந்தா தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அதனால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரடியாக சமந்தாவை அழைத்ததாக கூறப்படுகிறது.

சமந்தாவின் பதிவு
இந்த அரிய வாய்ப்பு குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவில்,“நான் வளர்ந்த காலத்தில் எனக்குத் துணையாகவோ, தட்டிக் கொடுக்கவோ யாரும் இல்லை.
இங்கெல்லாம் வந்து சேருவேன் என்று ஒருபோதும் என் உள்ளுணர்வு சொன்னதே இல்லை. செல்ல வேண்டிய பாதை எதுவென்றும் தெரியவில்லை… இந்தக் கனவுகள் எல்லாம் காண்பதற்கே எட்டாத உயரத்தில் இருந்தன.
ஆனால், தளராமல் தொடர்ந்து உழைத்தேன். அந்த உழைப்பிற்கு மதிப்பளித்த இந்தத் நாட்டிற்கு நான் என்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.