மீண்டும் வித்தியாசமான வேடத்தில் சமந்தா - ஆச்சரியத்தில் திரையுலகம்
யசோதா படத்தில் இதுவரை நடித்திராத வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி பேமிலிமேன் 2 தொடருக்குப் பிறகு இந்திய அளவில் அறியப்படும் நடிகையாகியுள்ள சமந்தா அடுத்ததாக நடித்து வரும் யசோதா படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஹரி மற்றும் ஹரீஷ் படத்தை இயக்குகின்றனர்.
இந்தப் படத்தில் சமந்தா நர்சாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அவர் நர்சாக நடித்ததில்லை. மிகவும் பவர்ஃபுல்லான வேடம் என இயக்குனர் தெரிவித்துள்ள நிலையில் படத்தின் முதல் ஷெட்யூல்ட் வெற்றிகரமாக கேரளாவில் முடிந்துள்ளது.
மேலும் தி பேமிலிமேன் 2 க்குப் பிறகு சமந்தா பான் - இந்தியா அளவில் கவனத்தை பெற்றிருக்கிறார். இதுவொரு த்ரில்லர் திரைப்படம். வித்தியாசமாக அனைத்து ஆடியன்ஸையும் கவரும் விதத்தில் இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் வலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் யசோதா படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.