நாக சைதன்யாவிற்கு சமந்தா இரண்டாவது மனைவியா? அப்போ முதல் மனைவி யார் தெரியுமா?

Naga Chaitanya issue Samantha Akkineni
By Anupriyamkumaresan Sep 23, 2021 09:39 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in வதந்திகள்
Report

 நடிப்பு, மாடலிங், வெப் சீரிஸ் என தொடர்ந்து தன்னுடைய கேரியரில் பிஸியாக இருக்கும் சமந்தா, கடந்த சில மாதங்களாக தனி பட்ட வாழ்க்கையை குறித்தும், பல்வேறு வதந்திகளில் சிக்கி வருகிறார்.

சமந்தா - நாக சைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைக்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுகுறித்து சமந்தா மற்றும் நாக சைத்தாயா வாய் திறக்காமல் இருப்பது மேலும் பல வதந்திகளுக்கு வழி வகுத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க... சமந்தாவும், நாக சைதன்யாவும் சந்தோஷமாக இருந்த போது, இருவரும் சேர்ந்து பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர்.

நாக சைதன்யாவிற்கு சமந்தா இரண்டாவது மனைவியா? அப்போ முதல் மனைவி யார் தெரியுமா? | Actress Samantha Nagasaithanya Issue Second Wife

அப்போது சமந்தா நான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி என தெரிவித்திருந்தார். நாக சைதன்யாவுக்கு மிகவும் பிடித்தது அவரது தலையணை தான் என்றும், இருவரும் தூங்கும் போது தலையணை தங்களது நடுவில் இருக்கும் எனவே அது தான் அவரது முதல் மனைவி என சமந்தா கலகலப்பாக கூறி இருந்தார்.

பிரபல நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கிய அரட்டை நிகழ்ச்சியின் போது தான் சமந்தா, தங்களது படுக்கையறை ரகசியத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகிய ஜோடி விரைவில் சேர வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர்.