சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் உறுதி? படத்தில் நடிக்க ஒப்பந்தம் - ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற இருக்கும் செய்தி மேலும் உறுதியாகி உள்ளது. சமந்தா கூடிய விரைவில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக “மாஸ்கோவின் காவேரி” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா. படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் நடிகர் நாக சைதன்யாவை பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டதற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் தான் படுகிளாமராக நடித்தார். இது ஒரு புறம் இருந்தாலும், அவருக்கு அவரது கணவர் நாக சைதன்யாவிற்குமான காதல் என்றுமே குறைந்தது இல்லை என்று சமந்தா வெளிப்படையாகவே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். ஆனால், சமீப நாட்களுக்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் தனது பெயரினை மாற்றினார்.

அதே போல் தனது ஆண் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதனால் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் விரைவில் விவாகரத்து வாங்க போகின்றனர் என்ற தகவல் வெளியாகியது.

இது குறித்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் விவாகரத்து உண்மை தான் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது நாக சைதன்யா சமந்தாவுடன் தங்காமல் தனது தந்தை நாக அர்ஜுனாவின் வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டாராம்.

அதே போல் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக கூறி இருந்த நடிகை சமந்தா தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதனால் விவாகரத்து செய்தி மேலும் உறுதியாகி உள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்