முதல்வரை சந்தித்த நடிகை சமந்தா... பிரமிப்பில் கூறியது என்ன?
தமிழக முதல்வர் விஜய்யை நடிகை சமந்தா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முதல்வர் விஜய்
தமிழக சட்ட மன்ற தேர்தலில் தவெக கட்சி தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளை வென்று, சில கட்சிகளை கூட்டணியாக சேர்த்துக் கொண்டு, தற்போது முதலமைச்சராக விஜய் பதவி வகித்து வருகின்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்த விஜய், சட்டென சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் இறங்கினார். கோடிகளில் சினிமாவில் சம்பளம் வாங்கியவர், தற்போது அரசியலில் சில லட்சங்கள் மட்டும் சம்பளம் வாங்கி வருகின்றார்.

இந்நிலையில் முதல்வரை சந்தித்து பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை சமந்தாவும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வரை சந்தித்த சமந்தா
முதல்வரை சந்தித்த புகைப்படத்தினை வெளியிட்டு, இன்று சென்னையில் தரையிறங்கிய போது அளவற்ற மகிழச்சி காணப்பட்டது. ஏனெனில் நம்முடைய முதலமைச்சரை சந்திக்க சென்று கொண்டிருந்தேன்.
திரையில் மட்டும் கதாநாயகனாக இருக்க வேண்டியவர் விஜய் சார் இல்லை என்று தான் அதிகமாக நினைப்பதுண்டு. ஏனெனில் அவருடைய ஆளுமை, மக்கள் மீது காட்டும் அன்பு சினிமாவை விட வேறு சாதிக்க உருவாக்கப்பட்டவர் என்று உணர்ந்ததாகவும், ஒரு புதிய களத்தில் கால் பதிக்க துணிச்சல் அவசியம்.

தான் முத்திரை பதித்த துறையினை விட்டுவிட்டு, பெரும் சவால்கள், பொறுப்புகள் நிறைந்த புதிய கதைகளத்தை எடுத்துள்ளார், நல்ல மாற்றத்தினை கொண்டுவர முடியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் இதனை செய்கின்றார்.
எல்லோர் மனதிலும் சமூகத்தில் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்று நினைப்பு இருந்தாலும், அதனை ஒருசிலர் தான் செயலில் இறங்குகின்றனர். விஜய் சார் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்களை இன்னும் ஆச்சரியப்படுத்துவார் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க தேவையான வலிமை, துணிச்சல், ஞானம் இவை கிடைக்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.