இன்ஸ்டாகிராமில் சமந்தா வெளியிட்ட புது வீடியோ - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

samantha actresssamantha
By Petchi Avudaiappan Feb 09, 2022 08:41 PM GMT
Report

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவோடு சேர்ந்து நடித்துள்ளார். 

இதனிடையே  சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில், ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். அதேசமயம் நாகசைதன்யாவுடான பிரிவுக்குப் பிறகு தொடர்ந்து அவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார். 

இதற்கிடையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் சமந்தா... ஆனால் அவர்கள் இப்படி எல்லாம் அழைப்பார்கள் எனத் தொடங்கும் அந்த வீடியோவில், சமந்தாவின் பிரபலமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது. 

இதனைப் பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.