தினமும் எனக்கு கொலை மிரட்டல் வருது - சமந்தா ஸ்டைலிஷ் உதவியாளர் கதறல்!
இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு தெரிவிக்கப்படும் காரணங்களை இருவரும் மறுத்து வந்தனர். விவாகரத்து குறித்த பதிவிலேயே இருவரும் தெளிவாக விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் உதவியாளர் ஒருவர்தான் சமந்தா - சைதன்யா விவகரத்திற்கு முக்கிய காரணம் என வதந்திகள் பரவின. இது குறித்து சமந்தா தரப்பில் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்தது.
ஆனால், இது குறித்து ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகல்கார் பேசியுள்ளார். அதில், “சமந்தா என் சகோதரியைப் போல. சமந்தா - நாகசைதன்யாவுக்கு நெருக்கமானவர்களுக்கு எங்களது உறவைப் பற்றி தெரியும். நாக சைதன்யாவுக்கு நன்றாகவே தெரியும். இந்த சூழலில், சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு நான் காரணம் என சில மீடியாக்கள் சொல்லி வருவது வருத்தம் அளிக்கிறது.
சமந்தா - நாக சைதன்யாவின் ரசிகர்கள் என்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இடைவெளி இல்லாமல் எனக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றது.
இது குறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளேன். எனினும், சகோதரி சமந்தாவுக்காக இந்த மீம்ஸ், மிரட்டல்களை சமாளித்து கடந்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.