தி பேமிலி மேன் தொடருக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய சமந்தா
தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்குப் பின் தனது சம்பளத்தை சமந்தா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார், இந்த நிலையில் இந்த வருடம் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சமந்தாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெயரை சம்பாதித்து தந்தது.
இதில் ஈழப்போராளியாக ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்திய அளவில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
நாக சைதன்யாவுடனான திருமணம் முறிந்த நிலையில், புதிய படங்களை அதிகளவில் ஒப்புக் கொள்கிறார்.
தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல் ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் தெலுங்கு, தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தனது சம்பளத்தை 4 கோடிகளாக சமந்தா உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகை சமந்தா எனவும் கூறப்படுகிறது.