விவாகரத்துக்கு பிறகு சமந்தாவுக்கு குவியும் படவாய்ப்புகள் - என்னென்ன தெரியுமா?
நடிகை சமந்தா நடிப்பில் உருவாக இருக்கும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.
நாகசைதன்யா உடனான விவகாரத்தை அறிவித்துள்ள சமந்தா தற்போது மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சாகுந்தலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சமந்தா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தை எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இந்தப் படத்தைத் இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ளது. தற்போது சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாக உள்ளது. ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளனர். சமந்தா நடிப்பில் இரு மொழிகளில் உருவாக இருக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.