நடிகை சமந்தா விவாகரத்து 100 சதவீதம் உறுதி - முதன்முறையாக அவரே கூறிய பதில்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. சமீபத்தில் அவருக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் அது குறித்து அவர் கணவர் நாக சைதன்யா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குடும்பத்தினர் சம்மதத்துடன், இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அதன் பின்னர் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின் சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’ என்று மாற்றினார்.

இந்நிலையில் அவர் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை மாற்றி எஸ் என வைத்துள்ளார். அதில் இருந்து நாக சைதன்யா – சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற வதந்தி பரவி வருகிறது.

இது குறித்து இருவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் விவாகரத்து செய்ய இருப்பதை உறுதி படுத்துவது போலவே இருந்தது.

இந்நிலையில் முதல் முறையாக சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, விவாகரத்து குறித்த வதந்திக்கு முதல் முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், நான் சிறிய வயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது.

அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் கடைபிடித்து வருகிறேன். ஆனால் என் மனைவி உடன் விவாகரத்து என்ற செய்தி பரவி வருவதால் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன.

இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இது குறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்