சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து - நீதிமன்றத்தை நாடவுள்ள நடிகை சமந்தா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக புகழ் பெற்றவர் நடிகை சமந்தா. அவரும் அவரது கணவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை சமந்தா, அவர் தெலுங்கிலும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதன் பின் 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுன் மகனான நாக சைதன்யாவவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் நடந்த நாகார்ஜுனா பிறந்த நாள் நிகழ்ச்சியில், சமந்தா பங்கேற்கவில்லை. அதேபோல் அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் வீட்டில் விருந்து அளித்தனர்.

இதில் நாகார்ஜுனா, நாக சைதன்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவது உறுதி என தகவல் வெளியானது.

மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கான குடும்ப பெயரை நீக்கியதால் உறுதியான தகவல்கள் வெளியானது. ஆனால் சமந்தா நாகசைதன்யா தரப்பில் இருந்து இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அதுமட்டுமில்லாமல், அவர்களது விவாகரத்து தொடர்பாக வெளியான வதந்திகள் மிகுந்த வேதனை அளிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில், நடிகை சமந்தா தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையில் நண்பர்களோடு உற்சாகமாக சைக்கிளிங் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்