நீயே இல்ல போட்டோ எதுக்கு இனி - நாகசைத்தன்யாவின் போட்டோக்களை டெலீட் செய்த சமந்தா: ரசிகர்கள் அதிர்ச்சி!

Naga Chaitanya Samantha Ruth Prabhu photos deleted
By Anupriyamkumaresan Oct 29, 2021 08:30 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையான சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது கணவரின் புகைப்படத்தை அவர் நீக்கி இருக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்து மத வழக்கத்தின் படியும், கிறிஸ்தவ மத வழக்கத்தின் படியும் இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரியப் போகிறார்கள் என வதந்திகள் பரவியது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், தற்போது பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் இருக்கிறது.

நீயே இல்ல போட்டோ எதுக்கு இனி - நாகசைத்தன்யாவின் போட்டோக்களை டெலீட் செய்த சமந்தா: ரசிகர்கள் அதிர்ச்சி! | Actress Samantha Deleted Nagachaithanya Photos

இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா தற்போது அவரின் தோழிகளுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார். பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

அங்கிருந்து திரும்பிய பின் அவர் கமிட்டான பல படங்களில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் தனது கணவரின் குடும்ப பெயரை நீக்கிய சமந்தா. செல்லும் இடமெல்லாம் எடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் முக்கிய விஷயம் ஒன்றை செய்துள்ளார். அதாவது அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கி இருக்கிறார்.

நீயே இல்ல போட்டோ எதுக்கு இனி - நாகசைத்தன்யாவின் போட்டோக்களை டெலீட் செய்த சமந்தா: ரசிகர்கள் அதிர்ச்சி! | Actress Samantha Deleted Nagachaithanya Photos

இதுவரை 75 புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே அவரது கணக்கில் இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.